‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில், அந்த பாடல் படத்தில் இடம்பெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளியாகி சில நாட்களிலேயே பல சாதனைகளை இந்த பாடல் முறியடித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் வைரலாக முதல் சிங்கிள் பாடலான ‘செல்லம்மா’ இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.