இந்த வார OTT ரிலீஸ்: விஷாலின் மார்க் ஆண்டனி, அதர்வாவின் மத்தகம், தாஹிர் ராஜ் பாசினின் சுல்தான் ஆஃப் டெல்லி, ஆசிப் அலியின் காசர்கோல்டு, மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்
இந்த வாரம் OTT தளங்களில் சில முக்கியமான ரிலீஸ்கள் உள்ளன. விஷாலின் மார்க் ஆண்டனி, அதர்வாவின் மத்தகம், தாஹிர் ராஜ் பாசினின் சுல்தான் ஆஃப் டெல்லி, ஆசிப் அலியின் காசர்கோல்டு மற்றும் மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் ஆகிய படங்கள் இந்த வாரம் OTT தளங்களில் வெளியாகின்றன.
விஷாலின் மார்க் ஆண்டனி
நடிகர் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
அதர்வாவின் மத்தகம்
இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா,மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் மத்தகம். இந்த வெப் தொடரின் முதல் பாகம் ஆகஸ்ட் மாதம் ஹாட்ஸ்டார் வெளியாகி விமர்சனத்தை பெற்றது. இந்த இரண்டாவது சீசன் வரும் 12-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தாஹிர் ராஜ் பாசினின் சுல்தான் ஆஃப் டெல்லி
டெல்லியின் மிகப்பெரிய நிறுவனத்துடன் பணிபுரியும் அர்ஜுன் பாட்டியாவை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் தான் ‘சுல்தான் ஆஃப் டெல்லி அசென்ஷன் என்ற ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தொடரில் – தாஹிர் ராஜ் பாசின் நடிக்கிறார். அஞ்சும் ஷர்மா, வினய் பதக் மற்றும் நிஷாந்த் தஹியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ஹாட்ஸ்டார் தலத்தில் வெளியாக உள்ளது.
ஆசிப் அலியின் காசர்கோல்டு
ஆசிப் அலி, சன்னி வெய்ன், விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் தான் காசர்கோல்டு. தங்க சுரங்கத்தில் தங்கம் திருடுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்
உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த மிஷன் இம்பாசிபிள் பட வரிசையின் ஏழாவது பாகமான Mission Impossible Dead Reckoning ஒன்றாம் பாகம் திரைப்படம் ஜூலை மாதம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அமேசான் பிரைமில் அக்டோபர் 13-ம் தேதியில் இருந்து அனைவருமே பார்க்கலாம். இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.