Saturday, December 2, 2023

விரைவில் உருவாக இருக்கும் பையா 2ஆம் பாகம்..யார் ஹீரோ தெரியுமா?

லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா..இந்த திரைப்படம் மிகவும் பெரிய ஹிட் கொடுத்தது,இப்படத்தில் கார்த்தியின் பெயர் மக்களுக்கு நன்கு தெரிந்தது என்றும் சொல்லலாம்..

தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்கி இருக்கும் நேரம்…அவரை காப்பாற்றுவதற்காக ஹீரோ கார்த்தி களமிறங்கும் கதையே இப்படம்…இது காதல் சண்டை காமெடி என எல்லாமே கலந்து இருக்கும் ஒன்றாகும்..

காரிலேயே பயணம் செய்யும் நாயகன்-நாயகி இடையில் விறுவிறுப்பான காட்சிகள் என சூப்பர் ஹிட் படமாக அமைந்தது…கார்த்தி தமன்னா ஜோடிக்கு கிடைத்த மிக பெரிய படம் இது என்றும் அனைவராலும் ஒற்றுக்கொள்ள படும்…இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எப்போதோ கேள்வி எழுப்பிவிட்டனர் ஆனால் இயக்குனர் தரப்பில் சரியான தகவல் வந்ததில்லை…லிங்குசாமி சரியான Form-க்கு வருவார் என்றும் எதிர்பார்க்க படுகின்றது… இந்த நிலையில் பையா 2 படம் குறித்து ஒரு சூப்பரான செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.அதன்படி நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க பையா 2 தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…அதனால் கார்த்திக்கு எப்படி வாழ்க்கை மாறியதோ இவருக்கும் மாறும் என தெரிகின்றது…

இந்த படம் முந்தைய படத்தின் தொடரா இல்லை வேறு ஒரு பாணியில் இருக்குமா என்பதை பொறுத்து இருந்து பாப்போம்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles