Saturday, December 2, 2023

பொன்னியின் செல்வன் 2 (PS -2) ஏப்ரல் -14 முதல் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
trisha ponniyin selvan look
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
vikram ps 2
இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ps 2

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles