Thursday, February 19, 2026

சென்னையில் பிரபல ‘காம்ப்ளக்ஸ்’ தியேட்டர் மூடல் ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சென்னை, அசோக் நகர், அசோக் பில்லர் அருகில் உள்ள பிரபலமான உதயம் தியேட்டர் வளாகம் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1983ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தியேட்டர் வளாகம் 41 வருடங்களாக செயல்பட்டு வந்தது.

மல்டிபிளக்ஸ் கலாச்சாரம்

ADVERTISEMENT

இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தான் பரிச்சயம். ஆனால், அந்தக் காலத்திலேயே ஒரே வளாகத்தில் மூன்று, நான்கு தியேட்டர்களுடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சென்னையில் திறக்கப்பட்டன. அப்போது அவை ‘காம்ப்ளக்ஸ்’ என்று அழைக்கப்பட்டன.

சென்னை காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள்

தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் போன்றவை சென்னை நகரின் பழமையான ‘காம்ப்ளக்ஸ்’ தியேட்டர்கள். உதயம் காம்ப்ளக்ஸில் உதயம், சந்திரன், சூரியன் ஆகிய தியேட்டர்கள் 40 ஆண்டுகளாக பல வெற்றி படங்களை திரையிட்டுள்ளன.

அசோக் நகர் மக்களுக்கு வசதி

வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், மாம்பலம் பகுதி மக்களுக்கு உதயம் தியேட்டர் வளாகம் வசதியான ஒரு திரையரங்கம். மினி உதயம் தியேட்டர், தாராளமான பார்க்கிங் வசதி போன்றவை ரசிகர்களை ஈர்த்தன.

படங்களின் நினைவுகள்

பல படங்களின் பாடல் காட்சிகள் உதயம் தியேட்டர் வளாகத்தில் படமாக்கப்பட்டன. இத்திரையரங்கம் மூடப்பட்டாலும், அதன் நினைவுகள் ரசிகர்கள் மனதில் இருக்கும்.

கொரோனா தாக்கம்

கொரோனா காலத்திலிருந்து மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்துவிட்டது. உதயம் தியேட்டர் வளாகத்தில் மாலை, இரவு நேரக் காட்சிகள் அதிகம் நடக்காமல் மூடப்படுவது வாடிக்கையாக இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள்.

விற்பனை முடிவு

62,400 சதுர அடி கொண்ட இந்தத் தியேட்டர் 53 பங்குதாரர்களுக்கு சொந்தமானது. அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் பேச்சுவார்த்தைக்குப் பின் விற்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். 2009ம் ஆண்டு முதல் மூன்று முறை விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஒருவர் 80 கோடிக்கு ஏலம் கேட்டு விலைக்கும் வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. நீதிமன்ற சிக்கலில் இருந்த இடத்தின் தற்போதைய சட்ட நிலை என்ன என்று தெரியவில்லை.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்

அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள இந்தத் தியேட்டர் வளாகம் மூடப்பட்ட பின் அங்கு பல மாடி அடுக்குகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் வர உள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT