தமிழ்த் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி, தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் பிரபு. 1980 மற்றும் 1990களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது, வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றும் தனி இடம் உள்ளது.
நடிகர் பிரபுவின் அழகே கொழுக் மொழுக் என்ற உடலும், சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியும்தான். ஆனால் தற்போது, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபு, தமிழைத் தவிர மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கிய மெகா மல்டிஸ்டார் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஒரு பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடிகர் ரகுமான் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனால், இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக பிரபு தன்னுடைய உடல் எடையை குறைத்தாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த புகைப்படம், அவருடைய ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருவதுடன், அவர்களை குஷி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.