செய்தி:
நடிகர் ரஜினிகாந்த் சென்னை, நாவலூரில் 12 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
இந்த நிலம் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
நிலத்தை பதிவு செய்வதற்காக நேற்று ரஜினி திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
12 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாகவும், மொத்தம் 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி தனியாக ஒரு மருத்துவமனை கட்ட இருப்பதாகவும், இதில் ஏழைகளுக்கு இலவசம், வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இதனை அவர் நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
பிற தகவல்கள்:
ரஜினிக்கு சென்னை போயஸ் கார்டனில் வீடு உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையிலும், தாம்பரத்தை அடுத்த படப்பையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்திலும நிலம், பண்ணை வீடுகள் உள்ளன.
ரசிகர்கள்:
ரஜினி வருகையை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தபடி சென்றார் ரஜினி.
