Tuesday, February 24, 2026

மேஷ ராசிக்கான குரோதி வருடப் பலன்கள் 2024

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

பொது:

சாமர்த்தியமான பேச்சின் மூலம் அனுகூலம் பெறலாம்.
வீண் வாக்குவாதம் பகை வளர்ப்பதை தவிர்க்கவும்.
எல்லோரிடமும் சமமாக பழகி, நன்மதிப்பு பெறுவீர்கள்.
மனதில் டென்ஷன், உடல் சோர்வுகள் வரலாம்.
புதிய நபர்களின் அறிமுகம், நன்மை உண்டாகும்.
வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும்.
வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
தொழில்:

ADVERTISEMENT

திட்டமிட்டு செயல்பட்டால் வளர்ச்சி உண்டாகும்.
வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டும்.
துணிச்சலுடன் வேலை செய்ய வேண்டும்.
முக்கிய முடிவுகளில் அவசரப்பட வேண்டாம்.
தொழில் வியாபார தடங்கல்கள் நீங்கும்.
சாதுரியமான பேச்சு வியாபார விருத்திக்கு உதவும்.
குடும்பம்:

குடும்பத்தில் அன்புடன் பேசுவது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம்.
விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
பெண்கள் எந்த காரியத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும்.
அரசியல்:

அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலம்.
உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மனதிற்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.
கலைத்துறை:

படிப்படியான வளர்ச்சி காண்பீர்கள்.
ரசிகர்களுக்காக செலவு செய்வீர்கள்.
சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள்.
புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும்.
மாணவர்கள்:

எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
பாடங்களை நன்றாக படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள்.
மாதந்திர பலன்கள்:

அஸ்வினி:

எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
காரியங்களில் தடை தாமதம் உண்டாகும்.
வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும்.
குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது.
பரணி:

பொருள் வரத்து அதிகரிக்கும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
அரசாங்கம் மூலம் நன்மை உண்டாகும்.
தொழில் வியாபாரத்திற்கு பண உதவி கிடைக்கும்.
குடும்பத்தில் சண்டைகள் நீங்கும்.
கார்த்திகை 1ம் பாதம்:

குடும்பத்தில் திருமணம் கைகூடும்.
வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
எதிர்பார்த்த பணவரத்து வரும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT