தனுஷின் “ராயன்”: எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறாரா? படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் “ராயன்” திரைப்படத்தின் வில்லன் மற்றும் ஷூட்டிங் அப்டேட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்த தனுஷ், முதல்முறையாக “பவர் பாண்டி” படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் மாஸ் ஹிட் அடித்தது.
தற்போது பெரிய பிரேக்கிற்கு பிறகு, “ராயன்” மற்றும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.
“ராயன்” படத்தில் தனுஷுடன் சந்தீப், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவாவை வில்லன் ரோலுக்கு தனுஷ் கேட்டு இருந்தார். ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் இல்லை எனக் கூறி மறுத்துவிட்டாராம்.
தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த படம் வடசென்னையை போல முழுக்க முழுக்க நார்த் மெட்ராஸை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஏராளமான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
