நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. சர்ச்சைகளுக்கும் கிசுகிசுகளுக்கும் மிகவும் பிடித்தமானவர். இதனால் இவரது பெயர் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டே இருக்கும். நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், கெளதம் இயக்கும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார்.
எனினும் இவர் படப்பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்துகொள்வது கிடையாது, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தொடர்ந்து புகார் எழுந்தது. இதுபோன்ற நடிகர் சிம்புவின் கடந்தகால செயல்பாடுகளால் 4 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விவகாரங்களுக்கு தீர்வு எட்டப்படும்வரை சிம்புவின் படங்களில் ‘பெப்சி’ தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்பதாக பெப்சி அமைப்பு கூறியிருந்தது. இந்நிலையில் நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது நீக்கியுள்ளது. மேலும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்மையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் நடிகர் சிம்புவின் தயார் உஷா கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.இந்த நிலையில் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நடிகர் சிம்புக்கு போட்ட ரெட் கார்டு நீக்கம் அதேநேரத்தில், அன்பானவன், அடங்காதவன், அசராதவன் விவகாரம் தொடர்பாக மைக்கேல் ராயப்பனின் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கே முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.