Monday, February 23, 2026

ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

FM-ல் தொகுப்பாளராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறிய ஆர்.ஜே.பாலாஜி, தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. இந்த நிலையில், தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருந்த நிலையில், வரும் ஜனவரி 25ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படங்கள் வசூல் ரீதியில் தயாரிப்பாளருக்கு மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 7ல் பூர்ணிமா ரவி பணப்பெட்டியுடன் வெளியேறினார்

பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பல விஷயங்கள் புதிதாக கொண்டு வரப்பட்டன. பிக்பாஸ், ஸ்மால் பாஸ், பழைய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் பல சம்பவங்கள் செய்யப்பட்டது.

இதில் 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸில் தற்போது 8 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களுக்குள் போட்டி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. ரூ.1 லட்சம் முதல் தொடங்கிய இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என ஆர்வம் அதிகரித்தது. விசித்ரா தான் எடுத்து செல்வார் என கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் ட்விஸ்டாக பூர்ணிமா ரவி எடுத்து சென்றார். அதுவும் ரூ.16 லட்சத்துடன் பெட்டியை எடுத்து செல்வதாக அறிவித்தார்.

இதன் மூலம் பூர்ணிமா ரவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது வெளியேற்றம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT