Friday, February 20, 2026

Saba Nayagan Review:அசோக் செல்வன் நடித்த ‘சபாநாயகன்’ படத்தின் முழு விமர்சனம் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

நீதியைத் தேடி ஒரு மகளின் போராட்டம் ‘ஃபைண்டர்’ படத்தின் விமர்சனம் இதோ !

படம்: ஃபைண்டர் நடிகர்கள்: வினோத் ராஜேந்திரன், பல்லவி சுப்பிரமணியம், சார்லி, நிழல்கள் ரவி,...

ஃபஹத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படத்தின் விமர்சனம் இதோ !

‘ரொமாஞ்சம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் ‘ஆவேசம்’ படத்தின்...

RomeoMovieReivew :விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தின் விமர்சனம் இதோ !

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் திறமையான மிருணாளினி ரவி நடித்த தமிழ்...

டபுள் டக்கர் விமர்சனம் : தவறான டக்கர், குழப்பமான திரைக்கதை!

டபுள் டக்கர் கதை: முகத்தில் தழும்புடன் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் பணக்கார இளைஞன்...
ADVERTISEMENT

Saba Nayagan Review:அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘சபாநாயகன்’.

பள்ளி, கல்லூரி கால காதல் கதைகள் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இடம் பெறும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு கடைசியில் வெளியாகியுள்ளது ‘சபாநாயகன்’. ஒருநாள் இரவில் மதுபோதையில் இருப்பதாக கூறி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகிறார் அசோக் செல்வன். செல்லும் வழியில் தன்னுடைய தோல்வியடைந்த ‘காதல்கள்’ கதையை போலீசாரிடம் சொல்லும் சூழல் உண்டாகிறது.

ADVERTISEMENT

பள்ளியில் 12 ஆம் வகுப்பு போது கார்த்திகா முரளிதரன் மீது உண்டாகும் காதல், கல்லூரி போது சாந்தினி சௌத்ரி உடன் ஏற்படும் காதல், எம்பிஏ போது மேகா ஆகாஷ் மீது உண்டாகும் காதல் என அசோக் செல்வன் வாழ்க்கையில் நடக்கும் காதல் போட்டியில் எந்த காதல் ஜெயித்தது? என்பதையும், காதலி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சபாநாயகனாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன்.

நடிப்பு

திருமணத்துக்கு பின் வெளியாகும் அசோக் செல்வனின் முதல் படம். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தால் ரசிகர்களை கவரலாம் என்ற அவரின் நம்பிக்கை இந்த படத்திலும் வெளிப்பட்டுள்ளது. அதனால் தான் பிறருக்கு காதல் இருப்பதை கண்டு தனக்கு ஒரு காதல் இல்லையே என ஏங்கும் பலரின் பிரதிபலிப்பாக ச.பா.அரவிந்த் கேரக்டரில் நடித்துள்ளார். எல்லாம் கூடி வரும் நேரத்தில் நடக்கும் பிரேக் அப்புகள், அதை கடந்து அடுத்த காதலை நோக்கி செல்வது என சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ் என முத்தான 3 ஹீரோயின்கள் ஒவ்வொரு பார்ட் கதையிலும் (பள்ளி/கல்லூரி/ மேற்படிப்பு) தங்களால் முடிந்த அளவுக்கு கேரக்டராகவே மாறியுள்ளார்கள். ஆனால் யாருக்குமே கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது மைனஸ். இவர்களை தவிர மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, அக்ஷயா ஹரிஹரன், ராம் குமார் ஆகிய கேரக்டர்கள் காட்சிகளை ரசிக்கும்படி கதை நகர உதவியுள்ளார்கள்.

தியேட்டரில் படம் பார்க்கலாமா?

சபாநாயகன் படம் பார்க்கும் ரசிகர்களை முழுக்க முழுக்க ஹேப்பியான மோடில் வைத்திருக்க வேண்டும் என்கிற இயக்குநர் கார்த்திகேயனின் மெனக்கெடல் முக்கால்வாசி வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்பது நீளம் தான். பள்ளி காட்சிகள் தொடர்பான இடங்களில் படத்தொகுப்பாளர் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். அதனைத் தவிர்த்து சில மைனஸ்கள் இருந்தாலும் இப்படம் ரசிகர்களை கவரும்படியே வந்துள்ளது.

மேலும் இந்தா ஒரு காதல் கதை முடிந்துவிட்டது என நினைத்தால் சில நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காதல் வருவது, பெண்கள் சற்று பணம் இருந்தால் தான் பார்ப்பார்கள் என்கிற ரீதியில் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT