பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாவது திருமணம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், ஐஸ்வர்யாவுக்கு தகுதியான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். இந்த திருமண விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், ஷங்கர் இயக்கத்தில் “நண்பன்” படத்தில் நடித்த நடிகர் விஜய் இந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை.
கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருந்ததால் விஜய் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால், விஜய் இல்லாத நிலையில், அவரது மனைவி சங்கீதா விஜய் திருமணத்தில் கலந்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சங்கீதா விஜய் தனியாக கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், ஷங்கர் மகளின் திருமணத்தில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு விழாவில் கூட விஜய் மட்டுமே கலந்து கொண்டார். சங்கீதா விஜய் பங்கேற்கவில்லை.
இந்த திருமண விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பதற்காகத்தான் சங்கீதா விஜய் கலந்து கொண்டாரா? அல்லது விஜய்க்கு பதிலாக அவர் சார்பாக கலந்து கொண்டாரா?
என்ற கேள்விகள் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவிற்காக கட்டியுள்ள சாய் பாபா கோயிலுக்கு சங்கீதா விஜய் விரைவில் சென்று வருவாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“லியோ” படத்தின் வெற்றி விழாவில் கூட சங்கீதா கலந்து கொள்ளவில்லை என்பதால், “கோட்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Ajith Sir Family in Director Shankar's Daughter Marriage ♥️♥️💥❤#AjithKumar #VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/Jcwx6d4OKy
— Ajith Seenu 2 👑 DARK DEVIL… தல..தாய்..தாரம்.. (@ajith_seenu) April 16, 2024
