சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளிவந்த மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக STR 48 படத்தில் நடித்து வருகிறார்…இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..
தேசிங் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது….இந்த படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் என்றும் அதற்காக தனது லுக்கை நடிகர் சிம்பு மாற்றிக்கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவருமே பார்த்து வருகிறோம்.
அதற்காக தான் இப்போது அவர் நீளமான மூடியை கூட வளர்த்து வருகிறார்…அது அவ்வப்போது வெளிவரும்போது ரசிகர்கள் அனைவரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…கிட்டத்தட்ட அவரின் புகைப்படங்களே கடந்த மாதத்தில் இருந்து வந்துகொண்டுள்ளது..
இந்நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சில வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவை பார்த்த பலரும் சேகுவாரா போல் இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
இது அப்போ அவரை பற்றிய கதையாக இருக்குமோ என பலரும் கருத்தை சொல்லி வருகின்றனர் என்ன நடக்கும் எப்போ ஷூட்டிங் என்பதை இந்த மாத இறுதிக்குள் சொல்வார்கள் என தெரிகிறது.
இப்படத்திற்கு அனிருத் அல்லது யுவன் இசையமைப்பார் என தகவல் பேசப்பட்டு வருகிறது பொறுத்திருந்து பாப்போம்.