Tuesday, February 24, 2026

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...

தமிழகத்தில் வெயில் தீவிரம்: செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது....
ADVERTISEMENT

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!
பெண்கள் குழந்தை பெற்றெடுத்த பிறகு, உடல் மற்றும் மனநிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை போன்றவை பெண்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது இயல்பானது என்றாலும், அதை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது, ​​அது எளிதாகவும், ஆரோக்கியமாகவும் நடைபெறும். வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு டிப்ஸ் பற்றி இப்போது பார்ப்போம்.

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்:

சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
மிளகு – 10
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும்போது, சீரகம், வெந்தயம் மற்றும் மிளகு சேர்க்கவும்.
தண்ணீர் அரை டம்ளர் அளவிற்கு குறையும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
இரவு நேரத்தில் தயாரித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
பயன்கள்:

இந்த டிப்ஸ் தொடர்ந்து குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட வயிற்று கொழுப்பு கரைந்து, தொப்பை குறைவதற்கு உதவும்.
இது செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை சரிசெய்யவும் உதவும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
குறிப்பு:

இந்த டிப்ஸ் குறித்து எந்த சந்தேகமும் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
உடல் எடையைக் குறைக்க, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT