90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சிம்ரன். தன்னுடைய துடிப்பான நடனம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வயதானாலும், தற்போதும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன், தன்னுடைய ஆரம்ப கால நடனத்தை மிகவும் இழப்பதாக தெரிவித்துள்ளார்.
சிம்ரன் கருத்து:
“நான் இப்போது அதிகமாக மிஸ் செய்வது என்றால் நடனத்தை தான் மிஸ் செய்கிறேன்.”
“ஆரம்ப கால பாடல்கள் போல இப்போது இல்லை. அந்த பாடல்களில் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.”
“சமூக வலைத்தளம், ஓடிடி வளர்ச்சியால் நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இப்போது நடனம் ஆடுவதை மிஸ் செய்கிறேன்.”
அரண்மனை 4 பாடல்:
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தில் ஒரு பாடலில் சிம்ரன் நடனம் ஆடி உள்ளார்.
அந்த பாடல் படத்தின் ப்ரோமோஷன் பாடலாக இருக்கலாம் அல்லது கடைசி காட்சியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
