ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்வியடைந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, “வழக்கம்போல் சிரித்துக்கொண்டே அணியில் இருப்பவர்கள் அனைவரும் தொழில்முறை வீரர்கள் என்பதால் வீரர்களை விமர்சிக்க இது சரியான நேரம் அல்ல. அவரவர் கடமை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். அடிப்படைகளை பின்பற்றி, தோல்விகளை ஒப்புக்கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்” என்று கூறினார்.
பாண்ட்யா மீது ஸ்டேயின் விமர்சனம்:
இந்தப் பதிலுக்கு பதிலளிக்கும் விதமாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம்மை நாமே ஊமையாக்கிக் கொண்டு, அடுத்த ஆட்டத்தில் தோற்று, சிரித்துவிட்டு, மீண்டும் அந்த முட்டாள்தனத்தை மீண்டும் செய்கிறோம். அதற்குப் பதிலாக வீரர்கள் தங்கள் மனதில் உள்ளதை நேர்மையாகச் சொல்லும் நாளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அ லவ் யூ குயிண்டன் டி காக்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெயினின் இந்த பதிவு, ஹர்திக் பாண்ட்யாவின் விமர்சனம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
பாண்ட்யா மீதான அதிருப்தி:
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா மீது அதிருப்தி நிலவுவது தொடர்ந்து வருகிறது.
மும்பை அணி இரண்டு பிரிவுகளாக செயல்படுவதாகவும், பாண்ட்யாவின் தலைமைத்துவம் பலவீனமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போட்டிகளின் போது அவரது நடவடிக்கைகள் மற்றும் போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்புகளும் விமர்சனங்களுக்கு ஆளாகின்றன.
தனது சொந்த அணியின் வீரர்களை விட எதிரணி வீரர்களை பாராட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், போலியாக நடந்து கொள்வதாகவும் பாண்ட்யா மீது குற்றம் சாட்டப்படுகிறது.
ஸ்டெயினின் டிவிட்டர் பதிவு, இந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
