Tuesday, February 24, 2026

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரூட்டுக்கு மாறிய அஜித் ! இனிமேல் தான் ஆட்டமே

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித், படத்திற்காக 16 கிலோ எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அஜித்தின் இந்த எடை இழப்புக்கு பின்னால் என்ன காரணம் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, அஜித் இப்போது அசைவ உணவு சாப்பிடுவதை முழுமையாக நிறுத்தி விட்டாராம். வெறும் சைவ உணவுகளும், காய்கறிகளையும் மட்டுமே சாப்பிட்டு தன்னுடைய எடையை குறைத்துள்ளார். இதற்கு, அஜித் ஒரு சைவ உணவு நிபுணரின் ஆலோசனையையும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

அஜித் சைவ உணவு உண்பதைத் தொடங்கிய பிறகு, அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது உடல் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. மேலும், அவருக்கு இருந்த உடல்நல பிரச்சனைகளும் படிப்படியாக குணமடைந்து வருகின்றன.

அஜித் இந்த சைவ உணவு பழக்கத்தை நிஜ வாழ்க்கையிலும் பின்பற்ற முடிவு செய்துள்ளார். இதன்மூலம், தனது உடல் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் இந்த முடிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அசைவ உணவுகளை வெளுத்து கட்டியவர். ஆனால், சில உடல்நல பிரச்சனைகளின் காரணமாக அவர் சைவத்திற்கு மாறினார். அஜித்தின் இந்த முடிவு, அவரை சூப்பர் ஸ்டாரின் பாதையில் நடக்க தூண்டியுள்ளது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT