Saturday, December 2, 2023

சூர்யா 42 படத்தின் டைட்டில் லீக்..இம்முறை ‘வி’ செண்டிமெண்ட்க்கு வாய்ப்பே இல்லை!!

suriya-42-movie-title-update

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வரும் சூர்யா 42 படத்திற்கு கடவுள் பெயரை தலைப்பாக வைத்துள்ளதாக தகவல் லீக் ஆகி உள்ளது.

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், வேதாளம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிவர் சிவா. இவர் தற்போது முதன்முறையாக நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 42 என அழைத்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சூர்யா 42 படத்தை 3டியில் படமாக்கி வருகின்றனர். ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக மட்டும் மொத்தம் 180 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சூர்யா. இதில் 60 முதல் 80 நாட்கள் வரை இப்படத்தில் இடம்பெறும் வரலாற்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கி வருகிராராம் இயக்குனர் சிவா.

suriya 42 unit warns of legal action against those sharing videos pics shot on its sets 001 1 1024x538 1

நடிகர் சூர்யாவின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக சூர்யா 42 இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் உள்ளது.

இதனால் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து தட்டித்தூக்கி உள்ளதாம். அதேபோல் இதன் ஆடியோ உரிமையும் 10 கோடிக்கு மேல் விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் தயாராகிவிட்டதாகவும், அதனை அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டிகளில் கூறி இருந்தார். இந்நிலையில், சூர்யா 42 படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அதன்படி இப்படத்திற்கு அக்னீஸ்வரன் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக வி சென்ட்டிமெண்டை கடைபிடிக்கும் இயக்குனர் சிவா இப்படத்திற்கு அக்னீஸ்வரன் என கடவுள் பெயரை வைத்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles