அமெரிக்கா & வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1-ல் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு வீரர் தேர்வு 28-ம் தேதி!
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும், ஜூன் 1-ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த உலகக் கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர் தேர்வு தேதி:
இந்த உலகக் கோப்பை தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகின்ற 28-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 27-ம் தேதி டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி முடிந்ததும், அடுத்த நாள் அதாவது 28-ம் தேதி உலகக் கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்வு செய்பவர்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்வார்கள்.
எதிர்பார்ப்பு:
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் யார் யார் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
