இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான போட்டி
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் நடராஜன் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
யாருக்கு வாய்ப்பு அதிகம்?
அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வந்தாலும், ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடுகள் மோசமாக இருந்தது.
டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், அவரது இடம் கேள்விக்குறியானது.
அதே சமயம், ஐதராபாத் அணிக்காக விளையாடும் நடராஜன் சிறந்த ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
யார்க்கர் பந்துகள மட்டும் நம்பாமல், ஸ்லோ பவுன்சர், ஷார்ட் பால்களை சரியான லைன் மற்றும் லெந்தில் வீசி வருகிறார்.
இதனால் டெத் ஓவர்களில் பும்ராவுடன் இணைந்து நடராஜன் பவுலிங் செய்தால், சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
யார் தேர்வு செய்யப்படுவார்கள்?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்தித்து ஆலோசித்து, ஏப்ரல் 28ஆம் தேதி அணி அறிவிக்கப்படும்.
ரசிகர்களின் கருத்து என்ன?
அர்ஷ்தீப் சிங் இல்ல நடராஜனா? யாருக்கு வாய்ப்பு அதிகம் என்று உங்கள் கருத்து என்ன? கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.
