எதற்கும் துணிந்தவம் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா உக்ரைனில் வாழும் தமிழ் மாணவர்களை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து என்னுடைய படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. நாம கொண்டாடிகிட்டு இருக்குற இந்த நேரத்துல தான் உக்ரைன்ல எதுவுமே அறியாத அப்பாவிகள், பொதுமக்கள், குழந்தைகள் என இந்தியாவைச் சேர்ந்த நிறைய பேர் அங்க இருக்காங்க அவங்க பாதுகாப்பாக இந்தியாவுக்கு வரணும், அங்க இருக்க மக்களும் பாதுகாப்பாக இருக்கணும். இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர நம்ம அரசாங்கம் நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறது. இருந்தாலும் அங்கிருந்து வெளிவரும் விடியோக்களைப் பார்க்கும் போது மனசு படபடக்குது. ஒரு தம்பியையும் நாம நேற்று இழந்து இருக்கோம். உயிர் சேதம் ஏதும் இல்லாமல் அவர்கள் தாயகம் திரும்பச் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யலாம். எனக்கு கூட்டு பிரார்த்தனை மேல நம்பிக்கை இருக்கு அதுபோல உங்களுக்கும் இருக்குன்னு நம்புறேன்” என்று கூறி சிறிது நேரம் பிராத்தனை செய்தார். +