தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்க சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதுமானது.
வெயில் அளவு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் வெயில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செய்ய வேண்டியவை:
தாகம் எடுக்காத பட்சத்திலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.
வெளியில் செல்லும்போது தண்ணீரைக் கொண்டு செல்லவும்.
வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ உடன் கொண்டு செல்ல வேண்டும்.
உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும்.
வளர்ப்புப் பிராணிகளை நிழலிலே வைக்க வேண்டும். அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை:
மதிய நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் (12.00 PM -3.00 PM)
வெளியில் வேலை செய்பவராக இருந்தால் கருப்பு நிறம் போன்ற அடர்த்தியான நிறம் கொண்ட உடைகளை அணிவதை தவிர்க்கவும்
உடல் படபடப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டால் தொடர்ந்து வேலை செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும்
குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
நீர் சத்து நிரம்பிய பழங்களை தவிர்க்கக்கூடாது
எண்ணெய்யில் வறுத்த நொறுக்கு தீனிகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்
பொதுமக்கள் வெயில் பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும்.
