கோலிவுட் ரசிகர்களின் அல்டிமேட் மாஸ் ஹீரோ அஜித், தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். AK 62 என தொடங்கப்பட்ட இந்தப் படம், தற்போது விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங், சில தினங்களுக்கு முன்னர் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இதற்காக அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜானில் முகாமிட்டுள்ளனர்.
அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்
அதேநேரம் கடந்த வாரம் விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், படப்பிடிப்பில் எந்த பிரேக்கும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தின் புதிய லுக்கில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
மங்காத்தா படத்தில் இருந்தே சால்ட் & பெப்பர் லுக்கிற்கு மாறிவிட்டார் அஜித். அதன்பிறகு அவர் நடித்த படங்களில் அதே சால்ட் & பெப்பர் லுக்கில் வருவதே வழக்கமாகிவிட்டது. ஆனால், விடாமுயற்சியில் இன்னும் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டார் அஜித்.
அதாவது முழுக்க முழுக்க நரைத்த முடியுடன் சில்வர் ஹேர்ஸ்டைலில் களமிறங்க முடிவு செய்துவிட்டாராம். கொஞ்சம் ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடியுடன் முழுவதும் ஒயிட் ஹேர் ஸ்டைலில் செம்ம மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த லுக், ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. தனது ரசிகர்களுடன் அஜித் இருக்கும் இந்த போட்டோ, விடாமுயற்சி ஸ்பாட்டில் எடுத்தது என்றே சொல்லப்படுகிறது. இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஸ்மார்ட் & ஹேண்ட்ஸம் லுக்கில் வைரலாகும் அஜித்தின் இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் ஆர்ட்டின்ஸ் போட்டு வருகின்றனர். மேலும், இந்த கெட்டப்பில் தான் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறாரா எனவும் அப்டேட் கேட்டு வருகின்றனர். அஜித்தின் போட்டோஸ் தொடர்ந்து வைரலாகி வருவதால், விரைவில் விடாமுயற்சி படத்தில் இருந்து அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் புதிய கெட்டப்பா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த புதிய கெட்டப்பாவை மிகவும் விரும்புகின்றனர். அவர்கள் அஜித் இந்த புதிய தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
சில ரசிகர்கள் அஜித் இந்த புதிய கெட்டப்பாவில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர். ஏனெனில், அஜித் ஏற்கனவே பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தில் அஜித் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவரது புதிய லுக் பார்க்கும்போது, அது ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று தோன்றுகிறது.