சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 171 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
80களில் ரஜினி நடித்த படங்களின் ஸ்டைலில், கூலிங் கிளாஸ் அணிந்து, ஸ்டைலான தோற்றத்தில் ரஜினிகாந்த் காட்சியளிக்கிறார். கையில் இருக்கும் வாட்சை கை விலங்கு போல அணிந்திருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் ரஜினி இதுவரை பார்த்திராத அளவுக்கு பயங்கர வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 80ஸ் ரஜினியின் ஸ்டைலுடன், வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் தற்போது வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகம் பகிர்ந்து, டைட்டில் டீசர் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
தலைவர் 171 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

