இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 171” திரைப்படத்தில் ரன்பீர் சிங் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது “வேட்டையன்” படத்தில் நடித்து வருவதால், “தலைவர் 171” படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வைக்க பிரபல நடிகர்கள் யார் யார் என்கிற பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகின.
தற்போது, பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரன்பீர் சிங் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால், இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள், “தமிழ் சினிமாவில் ஆள் கிடைக்கவில்லையா லோகி?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உண்மையில் ரன்பீர் சிங் நடிக்கிறார் என்றால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், “தலைவர் 171” படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
