லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறது.
டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மைக் மோகன் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாரூக்கான் கேமியோ ரோலில் நடிக்கவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
80களில் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்ட மோகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்தின் 170வது படமான ‘வேட்டையன்’ அக்டோபர் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், பஹத் ஃபாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் மற்றும் மைக் மோகன் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
