Tuesday, February 24, 2026

தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுவா ! வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுகு டைட்டில் கசிவு:

ADVERTISEMENT

இந்த நிலையில், ‘தலைவர் 171’ படத்திற்கு ‘கழுகு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஃபேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

காக்கா கழுகு சர்ச்சை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ரஜினிகாந்த் திரைப்பட விழா ஒன்றில் ‘காக்கா கழுகு’ கதை சொன்னார். அதற்கு பதிலடியாக விஜய் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் ஒரு கதை சொன்னார். இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது.

மீண்டும் பரபரப்பு:

அந்த சர்ச்சை கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது ‘கழுகு’ டைட்டில் விவகாரம் மீண்டும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதல் ஏற்பட வாய்ப்பு:

விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு செல்ல இருப்பதால் ரஜினி ரசிகர்களை பகைத்துக் கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டாலும், ‘காக்கா கழுகு’ கதை பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராததால் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பு:

இந்த விவகாரம் பற்றி ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

டைட்டில் டீசர் வெளியானதும், ‘கழுகு’ டைட்டில் உண்மையா என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT