தெலுங்கிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட தளபதி விஜய், தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கும் படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்ஷி இயக்க வுள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார், மேலும் இந்த செய்தி நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ஆகியோருடன் இது அவரது முதல் படம்.
மேலும் தளபதி 66 படம் இன்னும் ஷூட்டிங் தொடங்க வில்லை வம்ஷி பைடிப்பள்ளி, இதுவரை பார்த்திராத கேரக்டரில் விஜய்யை முன்வைக்க ஒரு சக்திவாய்ந்த திரைக்கதையை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது .