உலக ரசிகர்களின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற கட்சியை தொடங்கி, தனித்துவமான செயலி மூலம் கட்சி உறுப்பினர்களை சேர்த்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில்,இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் “தி கோட்” என்ற புதிய திரைப்படத்தின் இறுதிக்காட்சி படப்பிடிப்புக்காக கேரளா சென்றிருந்தார் நடிகர் விஜய். அப்போது அங்குள்ள ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதேசமயம், அவரை காணும் ஆர்வத்தில், சில ரசிகர்கள் அவரது காரையும் சேதப்படுத்தியிருந்தனர். இதுகுறித்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகர் விஜய் அங்குள்ள ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல், விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையிலேயே, தனது ரசிகர் ஒருவரை சந்தித்து விஜய் நெகிழ்ச்சியான செயல் ஒன்றை செய்துள்ளார்.
அதன்படி, தினமும் ரசிகர்களை சந்தித்து வரும் தளபதி விஜய், திடீரென கழுத்தில் மாலையுடன் தோன்றி, அங்கு திரண்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி, பூங்கொத்துக்களை வாங்கி சென்றார். பின்னர், மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் இந்த செயல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
