Tuesday, February 24, 2026

தளபதி விஜய் உடன் இதை பண்ண ரொம்ப கஷ்டம்! வெளிப்படையாக சொன்ன சிம்ரன்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை சிம்ரன், நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

பல நடிகைகள் விஜய்யுடன் நடனம் ஆடுவது கடினம் என்று கூறியுள்ளனர். விஜய்க்கு இணையாக பெரிய அளவில் நடனம் ஆடிய நடிகைகள் இல்லை என்றும் கூறலாம். ஆனால், சிம்ரன் மட்டும் தான் விஜய்க்கு இணையாக நடனம் ஆடி இருக்கிறார்.

ADVERTISEMENT

குறிப்பாக, “ஆல்தோட்ட பூபதி” பாடலில் விஜய் எந்த அளவிற்கு நடனம் ஆடினாரோ அதே அளவிற்கு சிம்ரனும் அசத்தலாக நடனம் ஆடி இருப்பார்.

அவருடைய நடனத்தை பார்த்து விஜயையே ஆச்சரியம் அடைந்து, “எனக்கு இணையாக நடனம் ஆடிய நடிகை சிம்ரன் தான். தனக்கு பிடித்த நடிகையும் சிம்ரன்தான்” என்று கூறியிருக்கிறார்.

விஜய் கூட நடனம் ஆட மற்ற நடிகைகள் தான் கடினம் என்று சொல்கிறார்கள் என்றால் சிம்ரனும் அதை தான் சொல்கிறார்.

பேட்டி ஒன்றில் பேசிய சிம்ரன்:

*”என்னுடைய திறமை எல்லாம் நடனம் மூலம் தான் வெளியே வந்தது. குறிப்பாக ஆல்தோட்ட பூபதி பாடலில் நடனம் ஆடியது பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அப்போது மட்டுமில்லை இப்போது வரை அந்த பாடலை கொண்டாடடி வருகிறார்கள்.

இந்த பாடலை நான் தியேட்டரில் பார்க்கும்போது பாடலின் சவுண்ட் கேக்கவே கேக்காது ரசிகர்களின் சத்தம் தான் கேட்கும். அந்த பாடலில் பெண்கள் பாடும் படி வரிகள் வராது. ஆண் மாட்டும் தான் பாடுவது போல வரும். இருந்தாலும் அந்த பாடல் எனக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

விஜய் கூட நடனம் ஆடுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அவருடன் நடனம் ஆடுவது ரொம்ப கஷ்டம். அவர் மிகவும் சிறப்பாக நடனம் ஆடுவார். அவருக்கு இணையாக நடனம் ஆட சவாலாக இருந்தது”*.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT