தமிழ், இந்தி, ஆங்கில படங்களில் நடித்து வரும் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். வெங்கி அட்லுரி இயக்கும் அந்த படத்தின் தலைப்பு டிசம்பர் 23ஆம் தேதி காலை வெளியாகும் என்று ஏற்கனவே ட்வீட் செய்தார் தனுஷ்.
இந்நிலையில் அவர் தெரிவித்தபடி அப்டேட் வந்திருக்கிறது. தனுஷ் படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைத்துள்ளது படக்குழு. தலைப்பு அறிவிப்பு வீடியோவில் கல்லூரி வகுப்பை காட்டியிருக்கிறார்கள். இது தனுஷுக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மாஸ்டர் படம் ரிலீஸானதில் இருந்து விஜய்யை தான் வாத்தி என்று ரசிகர்கள் அழைத்தார்கள். இனி வாத்தி என்றால் அது விஜய் அல்ல தனுஷ் தான் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
வாத்தி படத்தை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது. வாத்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராடும் இளைஞனின் கதை இது என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அத்ரங்கி ரே பாலிவுட் படம் நாளை ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவிருக்கிறது.
#vaathi #sir title motion poster pic.twitter.com/0oOnUPQpTH
— Dhanush (@dhanushkraja) December 23, 2021