திரையுலகில் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் ,முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . தமிழ், பாலிவுட் என இந்திய சினிமாவில் தாறுமாறாக கலக்கி வந்த அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று அழுத்தமான கால் தடத்தை பதித்துவிட்டார் .
அந்த வகையில் தற்போது இவரது நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சகர்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் ரசிகர்களும் தியேட்டர்களில் திருச்சிற்றம்பலம் படத்தை தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் முதல் நாளிலேயே அதிரடி வசூல் சாதனை செய்த இப்படம் தமிழ்நாட்டில் 2 நாள் முடிவில் ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் படம் நல்ல வசூலை ஈட்டும் என்றும் திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.