பிக்பாஸ் பிரபல நடிகை மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படத்தில் நடித்து மக்களிடம் அறிமுகமானவர் ஆஷ்கா கொராடியா (Aashka Goradia). அதன்பின்னர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர். இதனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பின்னர் நடிகை ஆஷ்கா கொராடியா நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.
எனினும் யோகா செய்வதில் வல்லவரான இவர் அடிக்கடி அவை தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தான் யோகா செய்யும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் மேலாடையின்றி தலைகீழாக நின்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஆஷ்கா கொராடியா கூறியிருப்பதாவது, நம்மை பற்றி சரியாக தெரியாதவர்கள், நம்மை பற்றி அதிகம் பேசுவது தான் காமெடி. நமக்கு தெரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். என் பாதம் வானத்தில், தலை தரையில்…ஹேட்டர்கள், என்னை பற்றி பேசுபவர்கள் வேறு வேலையை பார்க்கவும் என தெரிவித்துள்ளார்.
ஆஷ்கா கொராடியா புகைப்படத்தை பார்த்த நாகினி தொடர் புகழ் நடிகை மவுனி ராய் உள்ளிட்ட பிரபலங்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள். ஆஷ்கா கொராடியா கடைசியாக தாயன் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதன்பின்னர் அவர் அமெரிக்காவை சேர்ந்த பிரெண்ட் காபில் என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram