நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் திரிஷா. அடுத்தடுத்து இளம் நடிகைகள் வந்தாலும் 20 ஆண்டுகளாக நிலைத்திருப்பவர் திரிஷா. தற்போது சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சிம்ரன் பிரஷாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தி சிம்ரனின் தோழிஎன்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்த இன்று தமிழ் திரையுலகின் நட்சத்திரமாக மாறியிருக்கிறார். அஜித், விஜய்,சூர்யா, தனுஷ், விக்ரம், கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
இவரது திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களில் மத்தியில் கிசு கிசுவை ஏற்படுத்தும். இதனால் எப்போதும் அந்த பேச்சு எழுவதும் பின்னர் அடங்குவதுமாக இருப்பதால் ரசிகர்களும் சோர்ந்துவிட்டனர்.
இந்நிலையில், தற்போது திரிஷா திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. திரிஷா தற்போது, சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மலையாளத்தில் ஒரு படத்திலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் திரிஷா எந்த ஒப்பந்தமாகி உள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் புது படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
திரிஷா பிறந்த நாள் மே மாதம் கொண்டாடப்பட்டது. அப்போதே, திரிஷாவின் நெருங்கிய தோழி சார்மி, திரிஷா பேச்சிலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது என குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டில் திரிஷாவுக்கு திருமணமாகிவிடும் என்பதையே அவர் அவ்வாறு கூறினார். ஆனால் திரிஷாவோ, நான் திருமணம் செய்தால் காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடம் பிடித்து வருகிறாராம். எனினும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் குடும்பத்தினர் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்பு திருமணமானால், அத்தோடு நடிகைகளின் திரைவாழ்க்கைக்கு என்ட் கார்ட் விழும். ஆனால், இப்போது அப்படியில்லை. திருமணமான நாற்பது பிளஸ்ஸில் இருக்கும் வித்யா பாலன், ராணி முகர்ஜி, மஞ்சு வாரியர் போன்ற நடிகைகள் தொடர்ந்து நாயகியாக நடிக்கிறார்கள். இதனால் திரிஷாவுக்கு திருமணம் முடிந்தாலும் அவரது நடிப்புக்கு எண்ட் கார்டு இருக்காது எனவும் அவரை நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறுகின்றனர்.
எப்படியோ பல ஆண்டுகளாக எழுந்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தாண்டில் திருமணம் நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.