Saturday, December 2, 2023

LEO அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி! ஆனால் எங்கே, எப்போ? தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’LEO’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில நாடுகளிலும், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

leo 0

‘LEO’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வட அமெரிக்காவில் அதிகாலை 4 மணி மற்றும் 6.40 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதேபோல் பிரிட்டனில் அதிகாலை 5.10 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

leo 1 1

ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் தமிழக விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் ’LEO’ படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் கேரளா, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் முதல் காட்சி முடிந்த பிறகு தான் தமிழகத்தில் முதல் காட்சி ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

leo 2

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’LEO’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles