Saturday, December 2, 2023

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான பிரமாண்டமான அப்டேட்

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

Ponniyin Selvan posters 1200

ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, நந்தினி மற்றும் ஊமை ராணி எனும் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பூதி விக்ரம கேசரி கதாபாத்திரத்தில் பிரபு ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் செப்டம்பர் ஆறாம் (6) தேதி அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles