நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக டைரக்டர் விக்னேஷ்சிவன் எழுதி யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் பாடியிருந்த ‘நாங்க வேற மாறி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வலிமையின் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக மாறியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட ப்ரோமோ ஒரு மேக்கிங் வீடியோவாகும், இது வலிமையின் BTS.
மேலும் இந்த வீடியோவின் கடைசியில் தலை அஜித் பைக் ஓட்டும் போது கீழே விழும் காட்சி காண்பிக்கப்பட்டு உள்ளது.வலிமையின் ஸ்டண்ட் ஹைலைட்டாக இருக்கும் என்பதை இந்த மேக்கிங் வீடியோவும் உறுதிப்படுத்துகிறது.ஒவ்வொரு காட்சிகளிலும் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்று தெரிகிறது.
இந்த வீடியோ அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமைந்துள்ளது.