விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் வருகிற பொங்களுக்கு வெளியாகிறது.
மக்கள் இடையே செமயான வரவேற்பு இருக்கிறது அதனை பூர்த்தி செய்யுமா என்பதே பலரின் யோசனைகளாக இருந்து வருகிறது பல திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர் screenஐ சில்வர் screen ஆக மாற்றியுள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த தேதியில் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
காரணம் அந்தந்த படங்களின் சென்சார் ரிப்போர்ட் இன்னும் வராத காரணத்தால் தான் என சொல்ல படுகிறது.அதை தாண்டி இப்போது பல திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அதுபோல வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைபடங்களின் வெளிநாட்டு புக்கிங் தற்போது துவங்கியுள்ளது.இந்நிலையில், UK ஓபன் செய்யப்பட்ட இந்த இரு திரைப்படங்களின் டிக்கெட் புக்கிங் படுமோசமான நிலையில் உள்ளது என தெரியவந்துள்ளது.
ஆனால் வாரிசுக்கு நன்கு இருப்பதாக முன்னதாக சொல்லப்பட்ட நிலையில் இப்பொழுது இல்லை என சொல்லிவிட்டனர்.
அதன்படி, UKவில் விஜய்யின் வாரிசு படத்திற்கு வெறும் 40 டிக்கெட்களும், அஜித்தின் துணிவு படத்திற்கு வெறும் 22 டிக்கெட்களும் விற்றுப்போய் உள்ளது என்ற தகவல் வந்துள்ளது.
இதனால் விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கே இப்படியொரு நிலைமை அப்போ மற்ற படங்கள் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டால் ஒரு நபர் கூட இருக்க மாட்டார்கள் என சொல்ல படுகிறது.