தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி ‘வாரிசு’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.இந்த படத்துக்கு ப்ரோமோஷன் வேலைகள் தாறுமாறாக நடந்து வருகிறது..
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஹரி மற்றும் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் செய்து முடித்துள்ளனர்.
கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா,வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகர் விஜய், வாரிசு படத்தின் தீ தளபதி பாடலுக்கு நடனம் அமைத்த சாண்டி மாஸ்டருக்கு Gift அனுப்பி வாழ்த்தியுள்ளார்.
பூங்கொத்துடன் இனிப்புகள் அடங்கிய பரிசாக இது அமைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டி மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.அந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.