Tuesday, February 24, 2026

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் இணையும் ஹைவான் ஷூட்டிங் தொடங்கியது

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் - தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்!! இயக்குநர்...
ADVERTISEMENT

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால் துவங்கப்படாமல் உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டணி பட்ஜெட் மற்றும் சிம்புவின் சம்பளப் பிரச்னை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய விருது வென்ற இயக்குனருடன் இணையும் சிம்பு!

ADVERTISEMENT

இந்நிலையில், சிம்பு தனது அடுத்த படம் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ‘எஸ்டிஆர் 49’ படத்தின் பணிகளை உடனடியாகத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், ‘பார்க்கிங்’ படம் மூன்று தேசிய விருதுகளை (சிறந்த தமிழ்ப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர்) வென்றது. இதனால், ராம்குமார் பாலகிருஷ்ணன் – சிம்பு கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிம்புவின் இந்த முடிவு, வெற்றிமாறனின் படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், தேசிய விருது வென்ற இயக்குனருடன் அவர் இணைவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT