Thursday, November 30, 2023

Jr NTRஉடன் புதிய படம் குறித்த சந்திப்பு?! வெற்றிமாறன் அளித்த பதில்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக வெற்றிமாறன் இயக்கி உள்ளார்.

viduthalai

தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக் கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இந்த படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

viduthalai1

இந்த படம் தெலுங்கில் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படம் இயக்குவது குறித்து பேசியுள்ளார். “ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆரை சந்தித்தேன். நட்சத்திர மதிப்பு மற்றும் காம்பினேஷன் மதிப்பிற்காக ஒரு நடிகருடன் நான் இணைவதில்லை. நான் எழுதும் திரைக்கதை ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகரை கேட்கும் போது அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதற்கு இன்னும் கால அவகாசம் தேவை.” என வெற்றிமாறன் பதில் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles