சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மெகா ஹிட்டடித்தது.
தற்போது அவர் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் ரஜினிகாந்த் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிப்பது ஏற்கனவே தெரிந்த தகவல்.
ஆனால் தற்போது, அவர் போலி என்கவுண்ட்டருக்கு எதிராக களமாடுபவராகவும், சக காவல் துறை அதிகாரியுடனேயே பலமாக மோதும் அளவுக்கு அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த காவல் துறை கதாபாத்திரங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.
படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி என பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது.
1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த போலி என்கவுண்ட்டரை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.
டைட்டில் டீசரை பார்க்கையில் படம் கமர்ஷியலாகவும் இருக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.
ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
