Saturday, February 21, 2026

100 கோடி பட்ஜெட்டில் பாலிவுட்டை அதிர வைக்க போகும் விடாமுயற்சி படத்தின் இன்ட்ரோ சாங் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

100 அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது. இன்னும் இரண்டு அட்டவணைகள் மீதமுள்ளன. மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வட இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், புனேவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், சென்னைக்கு படக்குழு திரும்பியது. சில வாரங்கள் கடந்த நிலையில், இன்னமும் விடாமுயற்சி படத்தின் தொடங்கவில்லை என தகவல்கள் வெளியான நிலையில், படக்குழுவுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் விடாமுயற்சி டைட்டில் வெளியிட்டு 300 நாட்கள் ஆகிறது லைக்காவை காணும் என பதாகைகளை ஏந்தி அப்டேட் கேட்டு பஞ்சாயத்தைக் கூட்டினர்.

அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மறைமுகமாக முயற்சி படத்தின் சூட்டிங் நடக்கும் ஸ்டில் ஒன்றை படக்குழுவினரை கசிய வைத்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசென்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மிகப்பெரிய வாகனத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள மலையடிவாரம் பக்கத்தில் நடைபெற்ற வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கூடிய சீக்கிரமே விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மகிழ் திருமேனி மற்றும் லைக்கா திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் படமாக அமையும் இணையத்தில் பார்க்கப்படுகிறது. எல்லாம் சரி திரிஷா திரும்ப ஷூட்டிங் வந்து விடுவாரா என்கிற கேள்வியும் கடைசியில் எழத்தான் செய்கிறது.

விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT