தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் இரண்டாவது வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் நிலையில் அர்ஜுன் வில்லனாக களமிறங்குகிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் இரண்டாவது வில்லனாக ஆரவ் நடிப்பதாக இன்று (ஜூலை 13) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த மகிழ்ச்சிறுமேனியின் முந்தைய படமான கலக தலைவன் திரைப்படத்தில் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் முக்கிய வில்லனாகவும் இவர் இரண்டாவது வில்லனாகவும் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
ஆரவ், விடாமுயற்சி படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ஆரவின் நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் அஜர்பைஜானில் தொடங்கியது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
ஆரவின் அறிவிப்பு
ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த தருணத்திற்காக 20 வருடங்கள் காத்திருந்தேன். தல விடாமுயற்சி என்றும் தோற்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் ஆரவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
