Tuesday, February 24, 2026

விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய அஜித் ! வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தல அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தல அஜித்தின் துணிவு திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தல அஜித்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் இவ்வாண்டு துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகா உடன் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தில் இருந்து விலகினார்.

ADVERTISEMENT

அதன் பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களிடம் இந்த திரைப்படம் சென்றது, ஆனால் இந்த கதையை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்பட்டதால் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தல அஜித், நடிகை திரிஷா உள்ளிட்ட விடாமுயற்சி பட்டத்தின் பட குழுஅஜர்பைஜான் என்கின்ற நாட்டிற்கு படப்பிடிப்பு பணிகளுக்காக சென்றனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்த பிரபல கலை இயக்குனர் மிலன் அவர்கள் காலமானார். இது அப்படக் குழுவின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பியது விடாமுயற்சி படக்குழு.
கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த தல அஜித் அவர்கள் தற்பொழுது மீண்டும் சென்னையில் இருந்து அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. துபாய் உள்ளிட்ட பிற நாடுகளிலும் விடாமுயற்சி பட்டத்திற்கான படப்பிடிப்புகள் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள அஜித் அவர்கள் தொடர்ச்சியாக 70 நாட்கள் இந்த திரைப்பட பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த படத்திற்கு தல அஜித்துடன் ஆரம்பம் படத்தில் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடா முயற்ச்சி படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல கலை இயக்குனர் மிலன் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT