Tuesday, February 24, 2026

விடாமுயற்சி படத்தில் அஜித் எடுத்த அதிரடி முடிவும் அய்யயையோ பின்னணியும் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்த ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் முதல் ஷெட்யூல் 40 நாட்கள் வரை நடைபெற்றது. அதன்பின்னர் அஜித், த்ரிஷா ஆகியோர் சென்னை திரும்பினர். சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அஜர்பைஜான் சென்ற அஜித், கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியுள்ளார் த்ரிஷா. அதேபோல் அஜித்தும் அஜர்பைஜானில் இருந்து துபாய் பறந்துள்ளார்.

த்ரிஷா மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ஐடென்ட்டி என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதன் படப்பிடிப்புக்காகவே சென்னை திரும்பியதாகவும், ஜனவரியில் மீண்டும் அஜர்பைஜான் சென்றுவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் மெடிக்கல் செக்கப் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், ஷூட்டிங்கில் பணிபுரியும் உள்ளூர் பணியாளர்கள், படக்குழுவிடம் வாரம் இரண்டு நாட்கள் லீவு கேட்டுள்ளனர். அப்படி கொடுக்க முடியாது என்பதால், இரண்டு வாரங்களுக்கு சேர்த்து மொத்தமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஷூட்டிங் பிரேக் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அஜித், துபாய் சென்று ஜென்ரல் மெடிக்கல் செக்கப் செய்து வருகிறாராம். அதன்பின்னர் அவர் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதேபோல் படமும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT