தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான, தல அஜித் மற்றும் திரிஷா நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. ஏற்கனவே அஜர்பைஜானில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கியுள்ள படக்குழு, ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கு சென்றுள்ளது.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அஜித் மற்றும் திரிஷா நடைபயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அஜித்தின் எளிமையான உடையிலான ஸ்டைலுக்கு அவரது ரசிகர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அஜித் மற்றும் திரிஷா இருவரும் மற்ற முக்கிய குழு உறுப்பினர்களுடன் ஒரே விமானத்தில் ஏறினர்.
நடிகர் அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார். இதனால் அசர்பைஜானில் இனி சூட்டிங் இல்லை என்றும் சென்னையில் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்நிலையில் அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது மீண்டும் சூட்டிங்கிற்காக அசர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்களின் விமானநிலைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்தப் படத்தில் நடிகை திரிஷாவை மிகவும் இளமையாகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் காட்ட படக்குழுவினர் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுவரை இல்லாதவகையில் விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் கேரக்டர் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அசர்பைஜானில் இன்று அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 15 நாட்கள் அதி பயங்கரமான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் அஜித், திரிஷா, அர்ஜூன் மற்றும் ஆரவ் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆக்ஷன் காட்சியை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் கொரியோகிராப் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் அசர்பைஜானிலேயே எடுக்கப்பட உள்ளதாகவும் வரும் பிப்ரவரி வரையில் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியான நிலையில் உடனடியாக அவரது அடுத்தப்படம் துவங்கப்பட்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது படம் துவங்குவதில் அடுத்தடுத்த குழப்பங்கள் காணப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் அவரது பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அப்போதும் படம் துவங்குவதில் தாமதம் நிலவியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது சூட்டிங் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.அஜித்தின் படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அஜித், திரிஷா கூட்டணி ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவுப்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அர்ஜுன் கெட்டப் தற்போது செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

விடாமுயற்சி படத்தின் புதிய கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. ஜனவரி கடைசி வாரத்திற்குள் படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரியில் சில சிறிய பணிகள் முடிந்த பிறகு, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
