Tuesday, February 24, 2026

விடாமுயற்சி படபிடிப்பு தளத்தில் இணைந்த அர்ஜுன்! கெட்டப்பை பார்த்து மிரளும் கோலிவுட்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள படக்குழுவில் அர்ஜுனும் இணைந்துள்ளார். அங்கு அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ADVERTISEMENT

வைரலாகி வரும் புகைப்படத்தில் அர்ஜுன் மிகவும் மிரட்டலான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இந்த கெட்டப்பை பார்த்த பலரும் இது தான் விடாமுயற்சி படத்திற்கான கெட்டப் என்று கூறி வருகின்றனர்.

அர்ஜுன் அஜித்தின் படத்தில் நடிப்பது இது இரண்டாவது முறையாகும். முதன்முதலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வைரலாகி வரும் புகைப்படத்தில் அர்ஜுன் கெட்டப் மிகவும் மிரட்டலாக இருக்கிறது. கெட்டப் பார்த்துவிட்டு பலரும் இது தான் விடாமுயற்சி கெட்டப் என்று கூறி வருகிறார்கள். அஜித்துடன் அர்ஜுன் இரண்டாவது முறையாக நடிக்கிறார். முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

, மங்காத்தா, ஜி மற்றும் கிரீடம் ஆகிய படங்களில் நடித்ததைத் தொடர்ந்து, ஐந்தாவது முறையாக நடிகை த்ரிஷா கிருஷ்ணனுடன் அஜித் குமார் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன் சர்ஜா, சஞ்சய் தத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், அஜித் குமார் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் சமீபத்தில் துபாயில் ஒன்றாக புகைப்படம் எடுக்கப்பட்டது, இது சாத்தியமான ஒத்துழைப்பு பற்றிய ஊகங்களை ரசிகர்களிடையே தூண்டியது. விடா முயர்ச்சியில் சஞ்சய் தத் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று முந்தைய வதந்திகள் தெரிவிக்கப்பட்டாலும், படத்தின் தயாரிப்பு குழுவிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT