Tuesday, February 24, 2026

தார தப்பட்டை கிழிய போவது உறுதி ! விடாமுயற்சி படத்தின் இன்ட்ரோ சாங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது.இன்னும் இரண்டு அட்டவணைகள் மீதமுள்ளன. மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வட இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், புனேவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன கதை? விடாமுயற்சி படத்துடைய கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதன்படி அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: படம் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளோடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனியும் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பதில் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தி க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகூட அட்டகாசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கார் ஒன்று ஒரு பக்கம் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக இந்தப் புகைப்படம் அஜர்பைஜான் ஷெட்யூலில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் அஜித் அறிமுகமாகும் துவக்கப்பாடல் பற்றி இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களிடம் கூறியுள்ளார். இப்படத்தின் டைட்டில் சாங் என அழைக்கப்படும் துவக்கப்பாடலுக்கு ‘கும்தா’ என பெயர் வைத்துள்ளோம். இப்பாடல் அஜித் ரசிகர்களை தியேட்டரில் நடனமாட வைக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் ஒரு அருமையான மனைவி செண்ட்மெண்ட் பாடலும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.விடாமுயற்சி படத்தின் இடைவெளியில் அஜித் இளமை தோற்றத்துடன் என்ட்ரி ஆகும் போது செமயா இருக்கும் எனவும் விடாமுயற்சி படத்தில் நடித்த பிரபலம் கூறிய தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT